ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழர் ஐக்கிய முன்னணியாக மாற்றமைடைகிறது : மத்தியகுழு!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) தனது பெயரை தமிழர் ஐக்கிய முன்னணியென மாற்றிக் கொள்ளவுள்ளது. இதற்காக கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் சம்மதம் பெறப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்படி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சின்னமாக பூ சின்னம் இருந்து வந்த நிலையில், புதிய சின்னமும் மாற்றப்படவுள்ளது. இதற்காக ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பிலிருந்து நிறைகுடம் சின்னம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதை தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக்கொண்டால், நிறைகுடம் சின்னத்தில் அடுத்த தேர்தலில் மாற்று அணி கூட்டணி களமிறங்குமென தெரிகிறது.